• Monday, 18 August 2025
மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் தீ விபத்து

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் தீ விபத்து

கன்னியாகுமரியில் அமைந்துள்ள மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக கோவில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. காலை, மதியம், மாலை பூஜைகளை கோவில் பூசாரிகளே நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் கருவறையில் இன்று காலை தீவிபத்து ஏற்பட்டது. தீவிபத்து ஏற்பட்டபோது பூசாரிகளும் வெளியே இருந்ததால் தீ மளமளவௌ கூரை வரை பரவியது. இதில் கோவிலின் கூரைகள் முழுவதும் சேதமடைந்தது. 
தீவிபத்து ஏற்பட்டவுடன் பொதுமக்களும், தீயணைப்பு துறை வீரர்களும் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் எந்தவித உயிர்சேதமும் ஏற்படவில்லை.
 
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் இன்று காலை வழக்கம்போல் தீபாராதனை நடைபெற்றது. அந்த தீபத்தில் இருந்து எழுந்த தீ தான் தீவிபத்திற்கு காரணம் என்று போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Comment / Reply From