• Monday, 07 October 2024
நடனத்தை மையமாக கொண்டு உருவான “ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட்”  இணையத் தொடர்

நடனத்தை மையமாக கொண்டு உருவான “ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட்”  இணையத் தொடர்

தமிழ் ஓடிடி உலகில்  புதுமையான படைப்புகள் மூலம் அனைவரையும் கவர்ந்து வரும் ஜீ5 தளத்தின், அடுத்த படைப்பாக வெளிவருகிறது  ‘ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட்’  இணையத் தொடர்.

முன்னணி இயக்குநர் விஜய் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக பணியாற்றியுள்ள இத்தொடரை விஜய், பிரசன்னா JK, மிருதுளா ஸ்ரீதரன் இணைந்து இயக்கியுள்ளனர். முழுக்க நடனத்தைப் பின்னணி கதைக்களமாகக் கொண்டு இத்தொடர் உருவாகியுள்ளது.  இத்தொடரில் இளம் நடிகர்களான தித்யா சாகர் பாண்டே, சின்னி பிரகாஷ், விவேக் ஜோக்தாண்டே ஆகியோர் நடித்துள்ளனர்.  இவர்களுடன் நாகேந்திர பிரசாத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

நவம்பர் 18 முதல் ஜீ5 தளத்தில் வெளியாகவுள்ளதை முன்னிட்டு படக்குழுவினர் பத்திரிக்கையாளர்களை  சந்தித்தனர். இந்நிகழ்வில், இயக்குநர் மிருதுளா ஸ்ரீதரன் பேசியதாவது:-
“இத்தொடருக்கான ஐடியா விதையாக இருந்த போதே எங்களை நம்பி வாய்ப்பளித்த, உடனிருந்து உருவாக்கிய ஜீ5 மற்றும் சிஜு சார் மற்றும் கௌஷிக் ஆகியோருக்கு நன்றி. இந்த தொடரில் உழைத்த குழுவினர் அனைவருக்கும் நன்றி. இந்த தொடர் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் பார்த்து ஆதரவு தாருங்கள்.”என்றார்.

பாடலாசிரியர் மதன்  கார்க்கி பேசியபோது, “நடனத்தை வைத்து ஓடிடியில் எதுவுமே இல்லை ஏனென்றால் நடனத்தை மையமாக வைத்து உருவாக்குவது மிக கடினம். அதிலும் குழந்தைகளை வைத்து உருவாக்குவது அதை விடக் கடினம். ஆனால் விஜய் அதில் கைதேர்ந்தவராக இருக்கிறார். ஒரு பெண் குழந்தை தன்னுடைய உலகம் என்ன எனத் தேடி, வெளியே வந்து ஜெயிப்பதை பேசும், இந்த படைப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள்”என்றார்.

டான்ஸ் மாஸ்டர் ஶ்ரீதர் பேசியபோது, “டான்ஸை வைத்து உருவாக்கியுள்ள தொடரில் நான் கலந்து கொள்வது மகிழ்ச்சி. “ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட்”  பார்க்கவே மிக வித்தியாசமாக இருக்கிறது. விஜய் சார் இயக்கத்தைப் பார்க்க ஆவலோடு இருக்கிறேன். தித்யா மற்றும் விவேக் மிக நன்றாக நடித்துள்ளார்கள். இத்தொடர் கண்டிப்பாகப் பெரிய வெற்றியைப் பெறும்” என்றார்.

நடன இயக்குநர் நாகேந்திர பிரசாத் பேசியபோது, “இயக்குநர் விஜய், சாம், கார்க்கி  மூவரும் திரைத்துறையில் எப்போதும் முன்னணியில் இருக்கும் கூட்டணி. அவர்களுடன் வேலை பார்க்க வாய்ப்பு கிடைத்தது ஆசீர்வாதம். விஜய்  இதனை அற்புதமாக இயக்கியுள்ளார். கிட்ஸ் உடன் நடனமாடியது சவாலாக இருந்தது. உங்கள் அனைவருக்கும் இந்த தொடர் கண்டிப்பாகப் பிடிக்கும்”என்றார்.

நடன இயக்குநர் ராஜு சுந்தரம் பேசியபோது “இந்த படக்குழுவினருக்கும் இயக்குநர் விஜய்க்கும் வாழ்த்துக்கள். நடனத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள தொடருக்கு ஆதரவு தந்த ஜீ5 க்கு நன்றி”என்றார்.

இயக்குநர் பாலா பேசியபோது, “எனது உதவியாளர் மிருதுளா இந்த தொடரை இயக்கியுள்ளார். அவருக்கு எனது சிறப்பு வாழ்த்துக்கள். இந்த தொடரை பார்க்க நன்றாக உள்ளது. தொடரில் பங்குகொண்ட அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்”என்றார்.

நடிகர் ஜீவா பேசியபோது, “ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட்”  டான்ஸ் ஸ்டெப் . இதைப் புரிந்து கொள்ளவே எனக்கு ரொம்ப காலம் ஆனது. இந்த தொடரில் நிறையப் புதுமுகங்களை அறிமுகப்படுத்தியுள்ளார்கள். பார்க்க மிகப் புதுமையாக இருக்கிறது. விஜய் சார் மற்றும் குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள். இத்தொடர் பார்க்க நானும் ஆவலாக உள்ளேன்”என்றார்.

இயக்குநர் விஜய் பேசியதாவது:-

“பாலா சார் எனது மானசீக குரு அவர் வந்து வாழ்த்துவது மகிழ்ச்சி. இந்த தொடருக்கு மூன்று ஹீரோ பரேஷ் ஜீ, சாம் CS, மதன் கார்க்கி மூவரின் பங்களிப்பும் அற்புதம். சந்தீப்பின் ஒளிப்பதிவு மிக தரமானதாக இருந்தது. பிரசன்னா JK, மிருதுளா ஸ்ரீதரன் மிகப்பெரும் உதவியாக இருந்துள்ளார்கள். அவர்களுக்கு நன்றி. குழந்தைகள் மிக அற்புதமாக நடித்துள்ளார்கள். இந்த மாதிரி தொடர் இந்தியாவில் இது தான் முதல் முறை உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்”என்றார்.

Comment / Reply From

Stay Connected

Newsletter

Subscribe to our mailing list to get the new updates!