• Sunday, 17 August 2025

உதயநிதியுடன் காதல் உருவான கதை : கிருத்திகா பேட்டி

உதயநிதியுடன் காதல் உருவான கதை : கிருத்திகா பேட்டி

கிருத்திகா உதயநிதி இயக்கிய ‘பேப்பர் ராக்கெட்’  இணையத் தொடர் ஹிட்டடித்துள்ளது. இதனையொட்டி கிருத்திகா உதயநிதியிடம் பேசினோம்..  

நீங்கள் இதுவரை உங்கள் குடும்பம் பற்றி பேசியதில்லையே?

“யாரும் கேட்டதில்லை, அதனால சொல்லலை... எல்லோரும் உதய் குடும்பம் பத்திதான் கேட்பாங்க” என்றபடியே சிரித்தவர் தொடர்ந்தார்... “அப்பா ராமசாமி, ஸ்பின்னிங் மில் பிசினஸ் பண்ணார். அம்மா ஜோதி, கல்லூரிப் பேராசிரியரா வேலை பார்த்தவங்க. அம்மா கிறிஸ்துவர், அப்பா இந்து. அவங்களும் காதல் திருமணம் பண்ணிக்கிட்டவங்கதான்” என்றவரிடம் திரைத்துறை மீதான ஈடுபாடு குறித்துக் கேட்டோம்.

“ஸ்கூல் படிக்கிறப்பவெல்லாம் எனக்குப் படிப்புலயே ஆர்வம் இருந்ததில்லை. விளையாட்டுலதான் அதிக ஈடுபாடு இருந்துச்சு. லயோலா காலேஜ்ல விஷுவல் கம்யூனிகேஷனும், எம்.ஓ.பி வைஷ்ணவா காலேஜ்ல மாஸ் கம்யூனிகேஷனும் படிச்ச பிறகுதான் எனக்கு சினிமா மேல ஈடுபாடு வந்தது. நான் விஷுவல் கம்யூனிகேஷன் படிச்சதே உதய்க்காகத்தான். உதய் லயோலால படிச்சிட்டிருந்தாரு. அப்ப லயோலால தமிழ் இலக்கியம், விஷுவல் கம்யூனிகேஷன்னு ரெண்டு படிப்புல மட்டும்தான் பெண்கள் சேர முடியும்னு இருந்துச்சு. நான் ஹிந்தி மீடியம்ல படிச்சதால் தமிழ் சுத்தமா வராது. அதனால விஷுவல் கம்யூனிகேஷன் எடுத்துப் படிச்சேன். 12-ம் வகுப்புலயே எங்களுக்குள்ள பழக்கம் ஏற்பட்டுடுச்சு. உதய் படிக்கிற காலேஜ்லயே படிச்சோம்னா ஒண்ணா சுத்தலாமேன்னு சேர்ந்தது இன்னிக்கு என்னை கிரியேட்டிவ் ஃபீல்டுக்குள்ள நகர்த்தியிருக்கு” என்றவர் இப்போதுதான் தமிழ் கற்றுக்கொண்டு வருவதாகக் கூறுகிறார்.

“தமிழ் படிக்க கஷ்டமா இருக்கும்னு என்னை ஹிந்தி மீடியம்ல சேர்த்து விட்டாங்க. ஆனா, எனக்கு ஹிந்தியும் வரலை. என் படங் களுக்கான வசனங்களை எல்லாம் தங்கிலீஷ்லதான் எழுதுவேன். இப்பதான் தமிழ் படிக்கக் கத்துக்கிட்டிருக்கேன். கூடிய சீக்கிரத்துலயே எழுதவும் கத்துப்பேன். உதய், தமிழ்ல ரொம்ப ஸ்ட்ராங். அவர் நிறைய படிப்பார்” என்றவர்,

“உதய் ரொம்ப சென்சிட்டிவ். எந்தப் பிரச்னைன்னாலும் முன்னால நிக்கணும்ங்கிற அவரோட குணத்தாலதான் இன்னிக்கு அவரோட தொகுதிக்கு செல்லப்பிள்ளையா கிட்டார்” என்றார் நெகிழ்ச்சியோடு.

அடுத்து, மகன் இன்பநிதி பற்றி பேசியவர், “அவருக்கு 18 வயசு ஆகப்போகுது. கல்லூரிக்குப் போகப்போறாரு. விளையாட்டுப் பயிற்சி, நண்பர்கள் வட்டம்னு அவர் உலகத்துல பிஸியா இருக்கார்’’ என்று பெருமிதத்தோடு சொன்னார். உண்மையில் திரைத்துறைக்குள் கிருத்திகா காலடி எடுத்து வைக்க ஒருவகையில் இன்பநிதியும் காரண மென்பது கூடுதல் சுவாரஸ்யம்.

``அவர் பிறந்து வீட்டுல இருந்தப்பதான் ஸ்கிரிப்ட் எழுத ஆரம்பிச்சேன். அவரையும் பார்த்துக்கிட்டு, திரைக்கதையிலயும் கவனத்தைத் திருப்பினேன். அப்படி உருவானதுதான் ‘வணக்கம் சென்னை’. சினிமால பல தரப்பட்ட ஜானர்கள்ல படம் பண்ணணுங்கிற ஆர்வம் இருக்கு. என்னைப் பொறுத்தவரைக்கும் பெரிய நடிகர்களை வெச்சுப் படம் பண்ணனும்ங்கிற திட்டமெல் லாம் இல்லை. ஸ்க்ரிப்ட் பண்ணுவேன். அது மாஸ் ஹீரோக்களுக்கானதா இருந்தா அவங்களை அணுகுவேன்” என்று சொல்லும் கிருத்திகாவுக்கு... மிஷ்கின், வெற்றிமாறன், மாரி செல்வராஜ், தியாகராஜன் குமாரராஜா ஆகிய இயக்குநர்களின் திரைக்கதை நேர்த்தியின் மீது மிகுந்த மரியாதை.
 
ஓர் இயக்குநராக உதயநிதியின் நடிப்பை எப்படிப் பார்க்கிறீர்கள்?

“உதயநிதிக்கு நடிக்க வருமாங்குற கேள்வி ஆரம்பத்துல எனக்குள்ள இருந்தது. ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படம் பார்த்தப்புறம்... ‘நல்லா நடிச்சிருக்காரு’ன்னு தோணுச்சு. மாரி செல்வ ராஜ் இயக்கத்துல இப்ப உருவாகிட்டிருக்கிற ‘மாமன்னன்’, உதயநிதியோட மிக முக்கியமான படமா இருக்கும். அரசியலுக்கு வந்தப்புறம் அவர் அரசியல் படங்கள்லதான் நடிப்பா ரான்னு கேட்கறவங்க உண்டு. உதய் அப்படி யெல்லாம் எந்த முடிவும் எடுக்கலை” என்று அழுத்தமாகச் சொன்னார்.

உதயநிதியும் நீங்களும் ‘ஃபிட்’டா இருக்கீங்களே?

‘`எங்க லைஃப்ஸ்டைலில் உடற்பயிற்சிக்கும் முக்கிய இடமுண்டு. ரெண்டு பேருமே உடற்பயிற்சி மேல தீவிர ஈடுபாடு கொண்ட வங்க. உடற்பயிற்சி செய்யும்போது நிகழுற ஹார்மோன் ரீதியான மாற்றங்கள் ரொம்ப நல்லது. என்கிட்ட யார் என்ன பிரச்னைன்னு வந்தாலும் ‘வொர்க் அவுட் பண்ணு, எல்லாம் சரியாகும்’னுதான் சொல்வேன்” என்று சிரித்தபடியே அந்த ரகசியம் பகிர்ந்தார் கிருத்திகா.

Comment / Reply From