• Thursday, 29 September 2022

’யானை’ கதைக்கு அருண்விஜய் கச்சிதம் : ஹரி பேட்டி

’யானை’ கதைக்கு அருண்விஜய் கச்சிதம் : ஹரி பேட்டி

 

இயக்குனர் ஹரி, ஹீரோ அருண்விஜய் காம்பினேஷனில் பெரிய எதிர்பார்ப்புடன் திரைக்கு வர காத்திருக்கிறது ‘யானை’

டைட்டிலே பலமா இருக்கே கதை என்ன? என்று ஹரியிடம் கேட்டபோது...

”யானைக்கு நல்ல நிதானமும் அதே அளவுக்குப் பெருங்கோபமும் இருக்கும்பாங்க. அப்படி ஒருத்தன்... எமோஷன், கோபம், பாசம், நிதானம் என எல்லாம் கலந்து நிற்கிற மண்ணின் மைந்தன். ராமநாதபுரம், ராமேஸ்வரத்தில் நடக்கும் கதை இது. ஆத்தா, அப்பத்தா, சித்தப்பு, அண்ணே, தம்பி, மச்சான், மதினின்னு ஒரு கும்பலே ஸ்பாட்ல நின்னாதான் நமக்கு வேலையே ஓடும். மனிதர்களோட கூடி வாழ்றதுதானே நம்ம பக்கத்து வழக்கம். அரிவாளைத் தூக்கிட்டுப் பாயுறதும், அப்புறம் கண்ணீர்விட்டுக் கட்டிப்பிடிச்சு அழறதும்தானே நம்ம பழக்கம். 

பொறுமைக்கும் பாசத்திற்கும் கோபத்திற்கும் எல்லை உண்டு. அதன் எல்லையைத் தாண்டும்போது பிரச்னைகளும் பலியும் ஏற்படுது. இந்தப் படத்தில் எந்தக் கேரக்டர் மீதும் பெரிய தப்பிருக்காது. வில்லனிடம்கூட 100 சதவிகிதம் தப்பிருக்காது. எல்லோரும் நல்லவரேன்னு சொன்னால் ஏத்துக்க மாட்டாங்க. என்னைப் பொறுத்தவரைக்கும் யாரும் முழுக்க முழுக்க தப்பானவங்க கிடையாது. எல்லோருக்கும் அவங்க பக்கத்து நியாயம் இருக்கும். ‘தமிழ்’, ‘ஐயா’ மாதிரியான மூட் படத்தில் இருக்கும். ஒரு பொண்ணு எப்படி இருக்கணும், ஒரு குடும்பம் எப்படி நடக்கணும், ஒரு சகோதரன் எப்படி இருக்கணும்னு நிறைய விஷயங்களை இதில் சொல்லியிருக்கேன். ” என்கிறார்.

உங்கள் மச்சான் அருண் விஜய்யுடன் இணைந்தது பற்றி?

“சினிமாவில் எல்லாமே அமையணும்ணே. வரவேற்பு, எதிர்பார்ப்பு, நல்ல புரொடியூசர், நல்ல கதைன்னு எல்லாம் அமையணும். அருணுக்கும் எனக்கும் அது தெரியும். ’யானை’ என் படத்தில் எல்லாம் பத்துப் பேரை அடிச்சா நம்பற மாதிரி இருக்கணும். நான் கதையை எழுதி முடிச்ச பிறகுதான் நடிகர்களைப் பற்றி யோசிப்பேன். அப்படி இந்தக் கதைக்கு ஏத்தபடி இருந்தவர்தான் அருண். அருமையாக நடித்திருக்கிறார். நான் எப்பவும் மிலிட்டரி டிஸ்ப்ளின்தான். கால் பிசகினால் ‘அடடா, அப்படியா மாப்ஸ், அரை மணி நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு வந்துருங்க’ன்னு சொல்லிட்டுப் போயிடுவேன். நமக்கு வேலைன்னா போர்க்களம் மாதிரி இருக்கணும். துப்பாக்கியை உயர்த்திப் பிடிச்சுக்கிட்டே இருக்கணும். எல்லாத்துக்கும் ரெடியாக இருக்கார் அருண்.”

ஹீரோயின் ப்ரியா பவானி சங்கர் எப்படி பண்ணியிருக்காங்க?

ராமநாதபுரத்துப் பொண்ணா வரணும். ஒரு நாள் நானும் என் மனைவியும் ஹைதராபாத் போனோம். பிளைட்டில் எங்களுடன் டிராவல் பண்ணுன பிரியா பவானிசங்கர் என் மனைவிகிட்டே பேசிட்டு வரும்போது பார்த்திட்டே வந்தேன். என் கேரக்டர் மலர் மாதிரியே பேசுகிற தோரணையும், ஜாடையும் இருந்தது. பிரமாதமான ஆர்ட்டிஸ்ட். எனக்கெல்லாம் நம்ம வேகத்திற்கு ஸ்பாட்டுல நின்னாத்தான், கிரகித்துக்கொண்டால்தான் ஷூட்டிங் நல்லபடியா போகும். ஒரு இம்மி மிஸ்டேக் வராமல் நடிச்சுக் கொடுத்தாங்க.

Comment / Reply From

Stay Connected

Newsletter

Subscribe to our mailing list to get the new updates!