• Sunday, 17 August 2025
சிவாஜி குடும்பத்திலிருந்து இன்னொரு ஹீரோ

சிவாஜி குடும்பத்திலிருந்து இன்னொரு ஹீரோ

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வீட்டிலிருந்து மீண்டும் ஒரு ஹீரோ உருவாகிறார். சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமாரின் இரண்டாவது மகன் தர்சன் கணேசன் நடிக்க வருகிறார்.

ஏற்கனவே மூத்தவர் துஷ்யந்த் தயாரிப்பளராகவும், நடிகராகவும் இருப்பது அனைவருக்கும் தெரிந்தது. இப்போது அவரது தம்பி தர்சன் கணேசனும் நடிக்க வருகிறார். பூனேயில் நடிப்பு பயிற்சி எடுத்துள்ள தர்ஷன், தமிழ், இந்தி, ஆங்கில மொழிகளில் தெருக் கூத்து நாடகங்கள் அரங்கேற்றிவிட்டு தகுந்த பயிற்சியுடன் உள்ளார். அவருக்கு பல கம்பெனிகள் அழைப்பு விடுத்துள்ளார்கள். விரைவில் முறைப்படி அவர்கள் அறிவிப்பார்கள் என தெரிகிறது.

Comment / Reply From