• Monday, 18 August 2025
ரஜினிக்கு என்னாச்சு?: வெளிவராத தகவல்கள்

ரஜினிக்கு என்னாச்சு?: வெளிவராத தகவல்கள்

இன்னிக்கு நாளிதழ் தலைப்பு செய்தியே ரஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதுதான். இப்போதானே அமெரிக்கா போய் உடம்ப ரிப்பேர் பண்ணிட்டு வந்தார் அதுக்குள்ள என்னாச்சு என்று  உங்களுக்கு தோணலாம். நீங்க பயப்படும்படி ஒணும் ஆகல அவருக்கு.
 
அவருக்கு மருத்துவர்கள் முழு உடல் பரிசோதனை மேற்கொண்டபோது ரத்த நாள திசு அழிவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் விரைந்து சிகிச்சைப்பெற்றால் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
 
இந்நிலையில், ரஜினிக்கு ஏற்பட்டுள்ள ரத்த நாள பாதிப்பை சரிசெய்யும் சிகிச்சையில் மருத்துவர்கள் ஈடுபட்டு இருப்பதாகவும், நரம்பியல் மற்றும் இருதய துறை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே ரஜினிகாந்த் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்திருப்பதால், பிற உறுப்புகளின் செயல்பாடுகளையும் மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 
இதுஒரு பக்கம் இருக்க, சமீபத்தில் தாதாசாகேப் விருது வாங்கியது, ‘அண்ணாத்தே’ ரிலீஸ், பேரன்களுடன் படம் பார்த்த போட்டோ வெளியே வந்தது. இதெல்லாம் கண் த்ருஷ்டி ஆகிடக்கூடாது என்பதற்காகதான் முழு உடல் பரிசோதனை செய்துகொண்ட செய்தியை பெரிய அளவில் ரீச்சாக்கியிருக்கிறார்கள் என்கிறார்கள்.
அடப்பாவிகளா இப்படியுமா புரளி கிளப்புவீங்க?

Comment / Reply From