• Monday, 18 August 2025
உலக தடகளத்தில் இந்திய வீராங்கனைக்கு வெள்ளி

உலக தடகளத்தில் இந்திய வீராங்கனைக்கு வெள்ளி

கென்ய தலைநகர் நைரோபியில் 20 வயதுக்குட்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில், பெண்களுக்கான நீளம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீராங்கனை ஷைலி சிங் (வயது 17) வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார். 
 
இந்த ஆண்டின் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா பெறும் மூன்றாவது பதக்கம் இதுவாகும்.  ஷைலி சிங்கின் தங்கப்பதக்க வாய்ப்பு 0.01 மீட்டர் வித்தியாசத்தில் நழுவியது. ஷைலி சிங் 6.59 மீட்டர் நீளம் தாண்டி இரண்டாவது இடத்தைப் பிடித்தார். அவரைவிட 0.01 மீட்டர் கூடுதலாக, அதாவது 6.60 மீட்டர் நீளம் தாண்டிய ஸ்வீடன் வீராங்கனை மஜா அஸ்காக் தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார். உக்ரைன் வீராங்கனை மரியா ஹோரிலோவா வெண்கலம் வென்றார்.

 

Comment / Reply From