• Friday, 26 April 2024
அஜித்துடன் சிவகார்த்திகேயன் சந்திப்பு

அஜித்துடன் சிவகார்த்திகேயன் சந்திப்பு

டாக்டர்’ படம் ரிலீஸுக்கு ரெடியாக இருக்கிறது. ‘அயலான்’ படம் ஷூட்டிங் முடிந்து, கிராபிக்ஸ் பணிகள் நடக்கின்றன. ‘டான்’ படம் ஷூட்டிங்கில் இருக்கிறது. ‘அருவி’ அருண் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தயாரிக்கும் ‘வாழ்’ படமும் ரிலீஸுக்குத் தயார். நடிப்பு, தயாரிப்பு என சிவகார்த்திகேயன் கையில் இப்போது நான்கு படங்கள் இருக்கின்றன.

“சிவகார்த்திகேயனின் தந்தையான ஜெயிலர் ஜெயப்பிரகாஷை மதவாதிகள்தான் கொலை செய்தார்கள்” என சமீபத்தில் கொஞ்சமும் ஆதாரமற்ற குற்றச்சாட்டைச் சொன்னார் பா.ஜ.க-வின் ஹெச்.ராஜா. சிவகார்த்திகேயனின் அப்பா பெயர் தாஸ். இவரும் சிறைத்துறையில் பணியாற்றியவர்தான். கொலைசெய்யப்பட்ட ஜெயிலர் ஜெயப்பிரகாஷுக்கும் சிவகார்த்திகேயன் தந்தைக்கும் சம்பந்தமே இல்லை. இதற்கு சிவகார்த்திகேயன் கடுமையான பதிலடி கொடுக்கப்போகிறார் எனச் சமூக வலைதளங்கள் பட்டிமன்றம் நடத்த, எந்த ரியாக்‌ஷனும் காட்டாமல் அமைதியானார் சிவா. ‘அப்பா விஷயம் அரசியலாக மாறுவதை அவர் விரும்பவில்லை’ என்கிறார்கள் உடனிருப்பவர்கள்.

விஜய்யின் அடுத்த படத்தை இயக்கும் நெல்சன், சிவகார்த்திகேயனுக்கு மிக நெருங்கிய நண்பர். அதனால் அவர் பேச்சைத் தட்டமுடியாமல், விஜய் படத்தில் ஓர் அட்டகாசப் பாடலை எழுதியிருக்கிறார் சிவா. இந்நிலையில், ‘தல படத்துக்கும் ஒரு பாட்டு எழுதுங்க தலைவா’ என அஜீத் ரசிகர்கள் ஆன்லைனில் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். நேரம் கிடைக்கும்போதெல்லாம் நேரில் சந்தித்துப் பேசுகிற அளவுக்கு அஜீத்துடன் நெருக்கம் பாராட்டுகிறார் சிவகார்த்திகேயன்.

‘டான்’ படத்துக்கு அடுத்தபடியாக சிவகார்த்திகேயனை இயக்கப்போவது யார் என்கிற கேள்வி இப்போதே பரபரப்பாகிவிட்டது. அஜீத் படத்தை இயக்கும் ஹெச்.வினோத் தொடங்கி பாண்டிராஜ் பெயர்வரை அடிபடுகிறது. பாண்டிராஜ் சொன்ன கதையை ஏற்கெனவே டிக் அடித்து வைத்திருக்கிறாராம் சிவா. ஆனால், அதில் அவருக்குக் குணச்சித்திரப் பாத்திரம்தானாம். ஹெச்.வினோத் பொலிட்டிகல் லைன் ஒன்றைச் சொல்லியிருக்கிறாராம்.

Comment / Reply From

Stay Connected

Newsletter

Subscribe to our mailing list to get the new updates!