• Monday, 18 August 2025
ஹோலி பண்டிகை புதிய உத்வேகத்தை தரட்டும் : பிரதமர் மோடி வாழ்த்து

ஹோலி பண்டிகை புதிய உத்வேகத்தை தரட்டும் : பிரதமர் மோடி வாழ்த்து

ஹோலிப் பண்டிகை நாட்டு மக்களுக்கு புத்துணர்ச்சியையும், புதிய உத்வேகத்தையும் நல்கட்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வண்ணங்களின் திருவிழாவான ஹோலிப் பண்டிகை நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது.

மகாராஷ்டிராவில் கரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் வழக்கமான உற்சாகமின்றி மக்கள் வீடுகளிலேயே ஹோலிப் பண்டிகையைக் கொண்டாடிவருகின்றனர்.

டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட பிற பகுதிகளில் வழக்கம்போல் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "அனைவருக்கும் ஹோலி வாழ்த்துகள். மகிழ்ச்சியின், சந்தோஷத்தின், குதூகலத்தின் விழாவான இத்திருநாள் நாட்டு மக்கள் அனைவருக்கும் புத்துணர்ச்சியும், புதிய உத்வேகமும் நல்கட்டும் என நான் வாழ்த்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த தனது ட்விட்டரில், "நாட்டு மக்களுக்கு ஹோலி வாழ்த்துகள். வண்ணங்களின் திருவிழாவான ஹோலி, சமூக நல்லிணக்கத்திற்கு வித்திடும் பண்டிகை. இந்தத் திருநாள் நமது தேசத்தின் பன்முகத்தன்மையையும், தேசியவாதத்தின் ஆன்மாவையும் வலுப்படுத்தட்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், அனைவருக்கும் ஹோலி வாழ்த்துகள். ஹோலிப் பண்டிகை நம் தேசத்தின் பன்முகத்தன்மையின் ஒவ்வொரு நிறத்தையும் சுட்டிக் காட்டக் கூடியது என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Comment / Reply From