• Monday, 18 August 2025
விவசாயிகளுடன் பேச தயார் : அமைச்சர் பேட்டி

விவசாயிகளுடன் பேச தயார் : அமைச்சர் பேட்டி

மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் நகரில் மத்திய வேளாண்துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு எப்போதும் பேசி உள்ளது. புதிய வேளாண் மசோதாக்களை ரத்து செய்யும் கோரிக்கை தவிர வேறு வழிகள் குறித்து விவாதிக்க விவசாய அமைப்புகள்  தயாராக இருந்தால், அவர்களுடன் பேச அரசாங்கம் தயாராக உள்ளது.
 
எண்ணெயில் கலப்படம் செய்வதை அரசாங்கம் தடுத்து நிறுத்தியதால் கடுகு எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. இந்த முடிவு விவசாயிகளுக்கு பயனளிக்கும். சமையல் எண்ணெய்களின் விலைகள் குறித்து அரசாங்கம்  கவனித்து வருகிறது.
 
இவ்வாறு அவர் கூறினார்.

Comment / Reply From