• Wednesday, 20 August 2025
விஜய் மக்கள் இயக்கம் தனித்துப்போட்டி

விஜய் மக்கள் இயக்கம் தனித்துப்போட்டி

கடந்த 2021-ம் ஆண்டு நடந்த முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தின் ஆதரவுடன் முதன்முறையாக வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இதையொட்டி வெற்றி பெற்ற வேட்பாளர்களை நடிகர் விஜய் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

தற்போது தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19-ம் தேதி நடைபெற உள்ளது. விஜய் மக்கள் இயக்கம் எந்தக் கட்சியுடனும் கூட்டணியோ ஆதரவோ இல்லாமல் தனித்துப் போட்டியிடப் போவதாக விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் “விஜய் மக்கள் இயக்கம் எந்தக் கட்சியுடனும் கூட்டணியோ ஆதரவோ இல்லாமல் தனித்துப் போட்டியிடுகிறது. எனவே விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்களுக்காக அனைத்து மாவட்ட தலைவர்களும், நிர்வாகிகளும், தொண்டர்களும், ரசிகர்களும் முழுமூச்சுடன் பிரசாரம் செய்து விஜய் மக்கள் இயக்கத்தின் மூலமாகச் செய்த நற்பணிகளை மக்களிடம் கொண்டு சேர்த்து வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்யவேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளனர். முன்னதாக தூத்துக்குடியில் விஜய் மக்கள் இயக்கம் திமுகவுக்கு ஆதரவளிப்பதாக நிர்வாகிகள் கூறியதாக தகவல் வெளியான நிலையில் புஸ்ஸி ஆனந்த் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Comment / Reply From