• Tuesday, 19 August 2025
வந்தார் ஸ்டாலின் போனார் எடப்பாடி

வந்தார் ஸ்டாலின் போனார் எடப்பாடி

தமிழக தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று, மே 2-ம் தேதி காலை முதல் எண்ணப்பட்டுவருகின்றன. பெரும்பாலான தொகுதிகளின் முடிவுகள் வெளியாகிவிட்டன. இன்னும் ஒரு சில தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை மட்டும் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இந்தநிலையில் திமுக இந்தத் தேர்தலில் பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றியுள்ளது.

திமுக தலைவர் ஸ்டாலின், வரும் வெள்ளிக்கிழமை, அதாவது மே மாதம் 7-ம் தேதி முதல்வராகப் பதவியேற்கவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக ஆளுநர் மாளிகையில் எளிய முறையில் பதவியேற்பு விழா நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை திமுக எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடைபெறவிருக்கிறது. அதில், அவர் முறைப்படி முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்படுவார்.

இதற்கிடையே, தேர்தலில் திமுக பெரும்பான்மையான இடங்களில் முன்னிலையில் இருக்கும் நிலையில் தமிழக முதல்வராக இருந்துவந்த எடப்பாடி பழனிசாமி தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்!

Comment / Reply From