• Monday, 18 August 2025
ரெயில் மற்றும் பொதுபோக்குவரத்து தொடக்கம்

ரெயில் மற்றும் பொதுபோக்குவரத்து தொடக்கம்

தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தினசரி கொரோனா பாதிப்பு 35 ஆயிரம் வரை சென்ற நிலையில் கட்டுப்பாடுகள் காரணமாக தற்போது தொற்று பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.
 
அதைத்தொடர்ந்து ஊரடங்கு கட்டுப்பாடுகளை மாநில அரசு படிப்படியாக தளர்த்தி வருகிறது. நாளை மறுநாள் முதல் மேலும் தளர்வுகள் இருக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக தொற்று குறைவாக இருக்கும் மாவட்டங்களில் பொதுபோக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்படும் என்று தெரிகிறது.
 
இதற்கிடையே சென்னை புறநகர் மின்சார ரெயில் சேவை தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கொரோனா அதிகரித்தபோது பயணிகள் வருகை குறைந்ததால் நிறுத்தப்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்களை மீண்டும் நாளை முதல் இயக்க தெற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது.
 
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- பயணிகள் வரத்து குறைவால் ரத்து செய்யப்பட்ட கீழ்க்கண்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மீண்டும் இயக்கப்படுகிறது.
 

Comment / Reply From