• Tuesday, 16 April 2024
மேகதாது அணை : எடியூரப்பாவுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

மேகதாது அணை : எடியூரப்பாவுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

கர்நாடக மாநிலம் மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு தரப்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் நடந்த காவிரி நதிநீர் ஆணைய கூட்டத்திலும் தமிழக அரசு தனது எதிர்ப்பை பதிவு செய்தது. 
 
கர்நாடக மாநிலம் மேகதாது அணை கட்ட முயல்வதை நிறுத்த வேண்டும். அணை கட்டுவதற்கு எந்தவித ஆரம்பக்கட்டப் பணிகளும் செய்ய ஆணையம் அனுமதிக்கக் கூடாது. மேலும், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் இக்கூட்டத்தில் மேகதாது அணை பற்றி விவாதிப்பதைத் தவிர்க்க வேண்டும் என அந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. 
 
இந்த பிரச்சனை தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கர்நாடக முதல்வர் எடியூரப்பா கடிதம் எழுதினார். அதில், மேகதாது அணை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதை தமிழக அரசு தவிர்க்க வேண்டும் என்றும், மேகதாது அணை திட்டத்தால்  தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் கிடையாது என்றும் குறிப்பிட்டிருந்தார்.
 
இதையடுத்து எடியூரப்பாவுக்கு தமிழக முதல்வர்  இன்று கடிதம் அனுப்பி உள்ளார். அதில், மேகதாது அணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு கைவிட வேண்டும் என கூறி உள்ளார்.
 
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நாளை டெல்லி சென்று மத்திய ஜல்சக்தி துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்திக்க உள்ளார். அப்போது, மேகதாது கட்ட முயற்சிக்கும் கர்நாடகாவின் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பது, மார்கண்டேய நதியின் குறுக்கே கர்நாடகா அணை கட்டிய விவகாரம் குறித்து நடுவர் மன்றம் அமைத்து தீர்வு காண வலியுறுத்துவது, நதிகள் இணைப்பு திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட தமிழக நலன் சார்ந்த கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுக்கிறார்.

Comment / Reply From

Stay Connected

Newsletter

Subscribe to our mailing list to get the new updates!