• Friday, 19 April 2024
மு.க.ஸ்டாலின் எழுதிய ‘உங்களில் ஒருவன்’ நூல் வெளியீட்டு விழா

மு.க.ஸ்டாலின் எழுதிய ‘உங்களில் ஒருவன்’ நூல் வெளியீட்டு விழா

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் “உங்களின் ஒருவன்” என்ற தலைப்பில் புத்தகமாக சுயசரிதை எழுதியுள்ளார்.  இந்த புத்தகத்தின் முதல் பாகம் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது.
 
நந்தம்பாக்கம் வர்த்தக மைய கூட்டரங்கில் நடைபெற்ற இந்த விழாவில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று “உங்களில் ஒருவன்” புத்தகத்தை வெளியிட, அமைச்சர் துரைமுருகன் பெற்றுக்கொண்டார். 
விழாவிற்கு தி.மு.க. பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் தலைமை தாங்கினார். தி.மு.க. பொருளாளர் டி.ஆர். பாலு முன்னிலை வகித்தார். தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. வரவேற்புரையாற்றினார். 
 
கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன், ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்-மந்திரியும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான உமர்அப்துல்லா, பீகார் மாநில எதிர்க்கட்சி தலைவரும், ராஷ்டீரிய ஜனதா தளத்தைச் சேர்ந்த தேஜஸ்வி யாதவ், கவிஞர் வைரமுத்து, நடிகர் சத்யராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய சுயசரிதை புத்தக வெளியீட்டு விழாவில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசியதாவது:-
 
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்க்கை நீண்ட நெடிய போராட்டம் நிறைந்தது என்பதால் சுயசரிதை நூலை எழுதி உள்ளார். தமிழ்நாட்டிற்கு வருவது எனக்கு எப்போது மகிழ்ச்சியான விஷயம் தான். நாடாளுமன்றத்தில் என்னை அறியாமல் பத்திரிகையாளர்களிடம் 'நான் தமிழன்' என்று கூறினேன்.
இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம்; மாநிலங்களில் இருந்தே இந்தியா என்பது வருகிறது. சுதந்திர இந்தியாவில், முதன் முறையாக மாநில உரிமைகள் நசுக்கப்படுகின்றன. ஜம்மு காஷ்மீர் மக்கள் தங்களை தாங்களே ஆள முடியாதவாறு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. 
 
பஞ்சாப் மாநிலத்திலிருந்து 100 கிலோமீட்டர் நிலத்தை அவர்கள் ஒருதலைப்பட்சமாக பறித்து எல்லைப் பாதுகாப்பு படைக்கு கொடுத்துள்ளனர். 
 
பிரதமர் இங்கு வந்து வேறு சில கருத்துக்களை தமிழக மக்கள் மீது திணிக்க முயன்றார். ஆனால், தமிழ் நாடு என்பது 2 வார்த்தைகள் அல்ல, 3,000 ஆண்டுகள் தொன்மையானது என்பது அவருக்குப் புரியவில்லை. அவர் இந்த மாநிலத்தையும், நாட்டையும் அவமதிக்கிறார். தொன்மையானது. தமிழ்நாட்டில் 3,000 ஆண்டுகளாக வேறு எந்த கொள்கைகளையும் திணிக்க முடியவில்லை.
 
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.
 

Comment / Reply From

Stay Connected

Newsletter

Subscribe to our mailing list to get the new updates!