• Monday, 18 August 2025
மிரட்டும் நீட் : மேலும் ஒரு மாணவி தற்கொலை

மிரட்டும் நீட் : மேலும் ஒரு மாணவி தற்கொலை

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான ‘நீட்’ தேர்வு நாடு முழுவதும் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நீட் தேர்வு பயத்தால் தனுஷ் என்ற மாணவரும்,  கனிமொழி என்ற மாணவியும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், காட்பாடி அடுத்த தலையாரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மாணவி செளந்தர்யா தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண்கள் வராது என்ற விரக்தியில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

Comment / Reply From