• Wednesday, 20 August 2025
மருத்துவ கட்டமைப்புக்கு 50 ஆயிரம் கோடி ரூபாய் கடன் உதவி

மருத்துவ கட்டமைப்புக்கு 50 ஆயிரம் கோடி ரூபாய் கடன் உதவி

நாட்டில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் வெகுவாக குறைந்துள்ளதால் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தொழில் நிறுவனங்கள் செயல்படத் தொடங்கி உள்ளன.
 
ஊரடங்கினால் பல்வேறு துறைகள் பொருளாதார ரீதியாக கடும் இன்னனல்களை சந்தித்து வரும் நிலையில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த 8 நிவாரணத் திட்டங்களை அறிவித்தார். இவற்றில் நான்கு திட்டங்கள் புதியவை என்றும், ஒரு திட்டம் சுகாதார கட்டமைப்புகளுக்கானது என்றும் கூறினார்.
 
கொரோனாவால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு ரூ.1.1 லட்சம் கோடி கடன் உத்தரவாதம் அளிக்கப்படும். மருத்துவ வசதிகள் குறைவாக உள்ள பகுதிகளில் மருத்துவ உட்கட்டமைப்பை வலுப்படுத்த 50 ஆயிரம் கோடி ரூபாய் கடன் உதவி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். 
 
புதிய கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ் வட்டி விகிதமானது, ரிசர்வ் வங்கி நிர்ணயிக்கப்பட்ட விகிதத்தை விட 2 சதவீதம் குறைவாக இருக்கும், கடன் காலம் 3 ஆண்டுகள் ஆகும். இந்த புதிய கடன் உத்தரவாதத் திட்டம் அனைத்து பகுதிகளிலும் சிறிய அளவில் கடன் வாங்குவோருக்கும் சென்றடையும் என்றும் நிதி மந்திரி தெரிவித்தார்.
 
மேலும், சர்வதேச போக்குவரத்து தொடங்கியதும், சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில், முதல் 5 லட்சம் சுற்றுலா விசாக்கள் இலவசமாக வழங்கப்படும் என்றும் நிதி மந்திரி அறிவித்தார்.
 

Comment / Reply From