• Monday, 18 August 2025
மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல்

மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல்

பாராளுமன்றத்தில் 2022-23-ம் நிதி ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை (பட்ஜெட்) மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இது அவர் தாக்கல் செய்யும் 4-வது பட்ஜெட் ஆகும்.

பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

வரி செலுத்தும் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். ஒருவர் செலுத்தும் வரி நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்கிறது.

தனி நபர் வருமான வரி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தனி நபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.2½ லட்சமாக இருக்கிறது. தற்போதும் அதே நிலையே தொடரும்.

ரூ.2½ லட்சத்துக்கு மேலும், ரூ.15 லட்சத்துக்கு மேலும் தற்போது விதிக்கப்படும் வரி சதவீதம் அப்படியே இருக்கும். அதில் எந்த மாற்றமும் இல்லை.

மூத்த குடிமக்களுக்கான வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ. 3 லட்சமாக நீடிக்கிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான வரியில் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்கு மத்தியிலும் ஜி.எஸ்.டி. வசூல் அதிகரித்துள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் ஜி.எஸ்.டி. வரி வசூல் சுமார் ரூ.1.40 லட்சம் கோடியாக உள்ளது.

கோதாவரி- கிருஷ்ணா, கிருஷ்ணா-பெண்ணாறு, பெண்ணாறு- காவிரி, தமங்கா-பிஞ்சல், பர்தாபி- நர்மதா ஆகிய 5 நதிகள் இணைப்புக்கான விரிவான திட்ட அறிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளது. நதிகளை இணைக்கும் திட்டம் தமிழகத்துக்கு பலன் அளிக்கும்.

மாநிலங்களுக்கு இடையே கருத்தொற்றுமை ஏற்பட்ட பின் நதிநீர் இணைப்பு திட்ட அறிக்கைகளை செயல்படுத்த நிதி உதவி அளிக்கப்படும். ரூ.4 ஆயிரம் கோடியில் நீர்பாசன திட்டங்கள் நிறைவேற்றப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 

Comment / Reply From