• Thursday, 21 August 2025
மத்திய அமைச்சருடன் துரைமுருகன் சந்திப்பு

மத்திய அமைச்சருடன் துரைமுருகன் சந்திப்பு

தமிழகத்துக்கும் கர்நாடக மாநிலத்துக்கும் இடையே காவிரி நீரை பங்கிடுவது தொடர்பாக பிரச்சினை இருந்து வருகிறது.

இந்த நிலையில் காவேரியின் குறுக்கே  மேகதாது கட்ட கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது. இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

முதல்-அமைச்சர்  மேகதாது திட்டத்தை கைவிட வேண்டும் என்று கர்நாடக முதல் மந்திரிக்கு கடிதம் மூலம் வலியுறுத்தினார். இந்த நிலையில் அணை விவகாரம் குறித்து மத்திய மந்திரியை சந்தித்து பேசுவதற்காக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார்.

தமிழக அரசின் இல்லத்தில் அவர் தங்கியுள்ள அவர் மத்திய ஜல்சக்தி துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத்தை இன்று 12 மணி அளவில் சந்தித்து பேசினார்.

அப்போது தமிழகத்தின் நிலைமையை எடுத்து விளக்கி கூறினார். காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகம் மேகதாது அணை கட்டினால், தமிழகத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்தார்.

சுப்ரீம் கோட்டின் தீர்ப்பின்படி தமிழகத்துக்கு உரிய தண்ணீரை கர்நாடகம் வழங்காமல் இருப்பதை அவர் சுட்டிக் காட்டினார். எனவே காவிரியின் குறுக்கே கர்நாடகா அணைகட்டுவதை தடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

மேலும் பல்வேறு நதிநீர் திட்டங்கள் குறித்தும் அவருடன் துரைமுருகன் விவாதித்தார். தமிழக அரசின் சார்பில் மனுவையும் வழங்கினார்.

டெல்லி பயணத்தை முடித்துவிட்டு துரைமுருகன் நாளை சென்னை திரும்புகிறார்.
 

Comment / Reply From