• Tuesday, 07 May 2024
புதுவையில் ரங்கசாமியை தோற்கடித்த இளைஞர்

புதுவையில் ரங்கசாமியை தோற்கடித்த இளைஞர்

30 தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரி மாநில சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.கவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், பா.ஜ.க 9 தொகுதிகளிலும், அ.தி.மு.க 5 தொகுதிகளிலும் போட்டியிட்டன. அதேபோல காங்கிரஸ் கட்சியின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் 15 தொகுதிகளிலும், தி.மு.க 13 தொகுதிகளிலும், வி.சி.க மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா ஒரு தொகுதியிலும் போட்டியிட்டன.

இதற்கான வாக்கு எண்ணிக்கை புதுச்சேரி மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் தாகூர் கலைக்கல்லூரியிலும் நடைபெற்றது. அதேபோல காரைக்கால், மாஹே, ஏனாம் உள்ளிட்ட பிராந்தியங்களின் 7 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை அந்ததந்தப் பகுதிகளில் நடைபெற்றது. மூன்று கட்டங்களாக நடைபெற்ற இந்த வாக்கு எண்ணிக்கை நள்ளிரவு 12.30 வரை நீடித்தது. 16 தொகுதிகளில் போட்டியிட்ட என்.ஆர்.காங்கிரஸ் 10 தொகுதிகளில் வெற்றிபெற்றது.

 9 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ஜ.க 6 இடங்களிலும் வெற்றிபெற்ற நிலையில், 5 இடங்களில் போட்டியிட்ட அ.தி.மு.க அனைத்து இடத்திலும் தோல்வியைத் தழுவியிருக்கிறது. எதிரணியில் 14 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வெறும் 2 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சியான தி.மு.க 6 இடங்களிலும் வெற்றிபெற்றிருக்கிறது. இந்தக் கூட்டணியில் தலா ஒரு தொகுதியில் போட்டியிட்ட வி.சி.க மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தோல்வியை தழுவியிருக்கின்றன.
 
ஐந்தில் ஒரு பகுதி என்ற கணக்கில் காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ், பி.ஜே.பி உள்ளிட்ட பிரதான கட்சிகளின் வேட்பாளர்களை வீழ்த்தி 6 சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றிபெற்றிருக்கின்றனர். முன்னாள் முதல்வர் ரங்கசாமி தட்டாஞ்சாவடி மற்றும் ஏனாம் என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். தட்டாஞ்சாவடி தொகுதியில் 12,978 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற ரங்கசாமியை, ஏனாம் தொகுதியில் 646 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருக்கிறார் சுயேட்சை வேட்பாளரான கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக்.

Comment / Reply From

Stay Connected

Newsletter

Subscribe to our mailing list to get the new updates!