• Tuesday, 19 August 2025
பிரதமர், ஜனாதிபதியை சந்திக்கும் ஸ்டாலின்

பிரதமர், ஜனாதிபதியை சந்திக்கும் ஸ்டாலின்

முதல்-அமைச்சரான பிறகு, முதன்முறையாக பிரதமர் மோடியை டெல்லியில் நேரடியாக சந்தித்து பேசுவதற்கு மு.க.ஸ்டாலின்   விருப்பம் தெரிவித்துள்ளார். எனவே அதற்கான அனுமதியை பெற தமிழக அரசுற முயற்சிகளை எடுத்துள்ளது.
 
இந்த சந்திப்பின் போது தமிழக அரசு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை கொண்ட மனுவை பிரதமர் மோடியிடம் முதல் அமைச்சர் ஸ்டாலின் அளிப்பார். டெல்லியில் பிரதமர் மோடியைத் தவிர ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, மத்திய நிதித்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோரையும் ஸ்டாலின்  சந்தித்து பேசுகிறார்.
 
அரசு ரீதியான சந்திப்புகள் மட்டுமல்லாமல் அரசியல் ரீதியான சந்திப்புகளும் நடைபெறுவதாக தெரியவருகிறது. அந்த வகையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் முக்கிய நிர்வாகிகளை ஸ்டாலின் சந்தித்துப் பேசுவதாகவும் கூறப்படுகிறது.
 
இந்த சந்திப்புகளுக்காக முதல்வர் ஸ்டாலின் 16-ந் தேதியன்று சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டுச் செல்கிறார். 17-ந் தேதியன்று தலைவர்கள் அனைவரையும் சந்தித்து பேசுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Comment / Reply From