• Monday, 18 August 2025
பிஜேபிக்கு எதிரான களத்தில் காங்கிரஸ் : பிரியங்கா பேச்சு

பிஜேபிக்கு எதிரான களத்தில் காங்கிரஸ் : பிரியங்கா பேச்சு

உத்தரபிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. பா.ஜ.க.விடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகிறது. அந்த மாநில பொறுப்பாளரும், காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பிரியங்காகாந்தி அங்கு முகாமிட்டு தேர்தல் ஏற்பாடுகளை கவனித்து வருகிறார். அவர் அங்கு அனுப்ஷாகர் என்ற இடத்தில் நேற்று பேசினார்.

அப்போது அவர், “உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள 403 சட்டசபை தொகுதிகளிலும் காங்கிரஸ் போட்டியிடும். அதற்கு கட்சி தயாராகி இருக்கிறது. 40 சதவீத இடங்கள் பெண்களுக்கு அளிக்கப்படும். பா.ஜ.க.வுக்கு எதிராக காங்கிரஸ் கட்சிதான் களத்தில் போராடுகிறது. சமாஜ்வாடியோ, பகுஜன் சமாஜ் கட்சியோ அல்ல” என கூறினார்.
 
 

Comment / Reply From