• Thursday, 21 August 2025
சேமிப்பு திட்டங்களில் வட்டி குறைப்பு இல்லை : மத்திய அரசு பல்டி

சேமிப்பு திட்டங்களில் வட்டி குறைப்பு இல்லை : மத்திய அரசு பல்டி

தபால் நிலைய சிறு சேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதங்களை அரசு குறைத்திருப்பதால் தற்சமயம் பெரும்பாலான சேமிப்பு திட்டங்களுக்கு குறைவான வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சகம் சுற்றறிக்கை நேற்று இரவு வழங்கிய நிலையில், அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் அந்த முடிவை நிதியமைச்சகம் திரும்பப்பெறுவதாக அறிவித்துள்ளது. இத்தகவலை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை தன் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

கடந்த மூன்று காலாண்டுகளில் சிறிய சேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதங்களை மாற்றாமல் நிலையாகச் செயல்படுத்திய அரசாங்கம், தற்சமயம் அதாவது மார்ச் 31, 2021 தேதியிட்ட நிதி அமைச்சக சுற்றறிக்கையின்படி, சிறிய சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் 2021 -2022 நிதியாண்டின் முதல் காலாண்டில் 50 -110 அடிப்படை புள்ளிகள் (100 அடிப்படை புள்ளிகள் / பிபிஎஸ் = 1%) இடையே பெருமளவில் குறைக்கப்படும் என்று நேற்று அறிவித்திருந்தது.

அதிலும் மிக முக்கியமாக பிபிஎஃப் சேமிப்பின் வட்டி விகிதம் 7% க்கும் குறைவானது. இது 1974 ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக அதாவது கடந்த 46 ஆண்டுகளின் வட்டி விகிதத்தை விட மிகவும் குறைக்கப்பட்ட நிலையில், அதற்கு பொதுமக்கள் நேற்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஏப்ரல் 1, 2021 முதல், தபால் அலுவலக சேமிப்புத் திட்டங்கள், பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்) - முந்தைய 7.1 சதவிகிதத்திலிருந்து 6.4 சதவிகிதம் குறைவாகவும், தேசிய சேமிப்புச் சான்றிதழ் (என்எஸ்சி) - 6.8 சதவிகிதத்திலிருந்து 5.9 சதவிகிதம் குறைவாகவும், சுகன்யா சமிர்தி யோஜனா (எஸ்.எஸ்.ஒய்) - 6.9 சதவிகிதம், முந்தைய 7.6 சதவிகிதத்திலிருந்து குறைந்ததுள்ளது. தபால் அலுவலக நேர வைப்பு விகிதங்கள் 0.40 ஆக 1.1% ஆகக் குறைக்கப்பட்டு 4.4- 5.3% வரம்பில் வட்டி விகிதங்கள் வழங்கப்படும் என்றும் நேற்றைய சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

Comment / Reply From