• Wednesday, 24 April 2024
சட்டசபை கூட்டத்தொடர் இந்த மாதம் தொடங்குகிறது

சட்டசபை கூட்டத்தொடர் இந்த மாதம் தொடங்குகிறது

கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் சட்டசபையை கூட்ட வேண்டும் என்பதால் எந்த தேதியில் சட்டசபையை கூட்டலாம் என்பது பற்றி அரசு விரிவாக ஆலோசித்து வருகிறது. சட்டமன்ற கூட்டத்தொடர் கடந்த மே 11-ந்தேதி தொடங்கியது. இந்த கூட்டம் 2 நாட்கள் நடைபெற்றது.

முதல் நாள் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் தற்காலிக சபாநாயகர் பிச்சாண்டி முன்னிலையில் பதவி ஏற்றுக்கொண்டனர்.

2-வது நாள் சபாநாயகர் தேர்வு நடைபெற்றது. இதில் போட்டியின்றி சபாநாயகராக அப்பாவு தேர்ந்தெடுக்கப்பட்டதால் அன்றைய தினமே சபாநாயகராக அப்பாவு பதவி ஏற்றார்.

அவரை முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட சட்டமன்ற கட்சி தலைவர்கள் வாழ்த்தி பேசினார்கள். அத்துடன் சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

முந்தைய அ.தி.மு.க. அரசு இடைக்கால பட்ஜெட்டை கடந்த பிப்ரவரி மாதம் 23-ந்தேதி தாக்கல் செய்தது. புதிதாக ஆட்சி அமைத்துள்ள மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு இந்த கூட்டத்தொடரில் முழு பட்ஜெட்டை ஆகஸ்ட் மாதத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.

புதிய அரசு அமைந்துள்ளதால் சட்டசபையில் கவர்னர் உரையுடன் சட்டசபை தொடங்கப்பட வேண்டும். அதற்கு பிறகு முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்து துறை ரீதியான மானியக்கோரிக்கை விவாதம் நடத்தப்பட வேண்டும்.

தற்போது கொரோனா தொற்று உள்ள சூழலில் ஊரடங்கு வருகிற 14-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

அதன் பிறகு ஊரடங்கில் மேலும் தளர்வுகள் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சூழலில் விரைவில் சட்டசபையை கூட்ட அரசு முடிவு செய்துள்ளது. கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் சட்டசபையை கூட்ட வேண்டும் என்பதால் எந்த தேதியில் சட்டசபையை கூட்டலாம் என்பது பற்றி அரசு விரிவாக ஆலோசித்து வருகிறது. அநேகமாக இந்த மாதத்துக்குள் சட்டசபை கூட்டப்படும் என அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comment / Reply From

Stay Connected

Newsletter

Subscribe to our mailing list to get the new updates!