• Thursday, 21 August 2025
கேரளாவில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம்

கேரளாவில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம்

கேரளாவில் சிறுபான்மையினர்களுக்கான கல்வி உதவித்தொகையில் முஸ்லிம்களுக்கு 80 சதவீதமும், லத்தீன் கிறிஸ்தவர் உட்பட மற்ற சிறுபான்மை சமூகத்தினருக்கு 20 சதவீதமும் வழங்கப்பட்டு வந்தது. இதை எதிர்த்து பாலக்காட்டை சேர்ந்த ஜஸ்டின் என்பவர் கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சிறுபான்மையினருக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதில் 80:20 விகிதாச்சார ஒதுக்கீடு பாரபட்சமாக உள்ளது என கூறி ஒதுக்கீடு நடை முறையை ரத்து செய்தனர். மேலும், இது குறித்து விளக்கம் அளிக்க கேரள அரசுக்கு உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் நேற்று சட்ட சபையில் பேசிய முதல்-மந்திரி பினராயி விஜயன் சிறுபான்மையினருக்கான கல்வி உதவி தொகை ஒதுக்கீட்டு பிரச்சினை தொடர்பாக கலந்து ஆலோசித்து முடிவு மேற்கொள்ள நாளை (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 3.30 மணிக்கு காணொலி காட்சி மூலம் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற இருப்பதாக தெரிவித்தார்.
 

Comment / Reply From