• Monday, 18 August 2025
குழந்தைகளுக்கும் இனி ஹெல்மெட் கட்டாயம்

குழந்தைகளுக்கும் இனி ஹெல்மெட் கட்டாயம்

இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லப்படும் குழந்தைகளுக்கு ஹெல்மெட் கட்டாயம் என்றும், அப்படிக் குழந்தைகளை அழைத்துச் செல்லும்போது 40 கி.மீ வேகத்துக்கு மேல் செல்லக் கூடாது என்றும் மத்திய அரசு புதிய உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது. மேலும், இந்த உத்தரவை மீறினால், ரூ.1,000 அபராதம் மற்றும் மூன்று மாத காலம் ஓட்டுநர் உரிமம் ரத்துசெய்யப்படும் எனவும் தெரிவித்திருக்கிறது.

மத்திய அரசின் சாலைப் போக்குவரத்துத்துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லப்படும் நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளும் கட்டாயம் ஹெல்மெட் அணிவிக்க வேண்டும் என்றும், அந்த ஹெல்மெட் இந்திய தர கட்டுப்பாட்டுஅமைப்பின் பி.ஐ.எஸ் தரத்துடன் இருக்க வேண்டும் எனவும் புதிய விதிமுறை வகுத்திருக்கிறது.

Comment / Reply From