• Tuesday, 19 August 2025
கவர்னர் உரையுடன் தமிழ்நாடு சட்டசபை கூட்டம்

கவர்னர் உரையுடன் தமிழ்நாடு சட்டசபை கூட்டம்

 

தி.மு.க. ஆட்சி அமைத்த பிறகு முதல் முறையாக தமிழக சட்டசபை இன்று கூடியது. ஒவ்வொரு ஆண்டும் கூடும் சட்டசபை முதல் கூட்டத்தில் கவர்னர் உரை நிகழ்த்துவது மரபாக இருந்து வருகிறது.  அந்த வகையில், 16-வது சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பிறகு, முதல் சட்டசபை கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இந்த கூட்டத்தில், கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடக்கவுரையாற்றி பேசியதாவது :-

தமிழ் மிகவும் இனிமையான மொழி. எளிமையான வாழ்க்கையை வாழுங்கள். அரசின் ஒவ்வொரு செயலும் சமூக நீதி, ஆண்-பெண் சமத்துவம், அனைவருக்குமான பொருளாதார நீதியை அடிப்படையாக கொண்டிருக்கும். தனக்கு வாக்களித்தோர் என்றும், வாக்களிக்காதோர் என்றும் எவ்வித பாரபட்சமின்றி அனைத்து மக்களுக்குமான அரசாக செயல்படும். 

உறவுக்கு கைகொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம் என்ற கொள்கைக்கு ஏற்ப மத்திய அரசுடன் நல்லுறவு பேணுவோம். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தமிழக அரசுக்கு தேவைப்படும் உதவிகள் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை பிரதமரிடம் முதலமைச்சர்  முன்வைத்துள்ளார்.


மத்திய அரசு வழங்கும் தடுப்பூசி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை. தமிழகத்துக்கு மத்திய அரசு ஒதுக்கும் தடுப்பூசிகளின் எண்ணிக்கையை உயர்த்திட வேண்டும்.  மாநிலங்களுக்கு சுயாட்சி என்ற இலக்கை எட்ட அரசு உறுதியாக உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

 

Comment / Reply From