• Wednesday, 20 August 2025
இந்தியாவில் கொரோனா வைரஸ்

இந்தியாவில் கொரோனா வைரஸ்

இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலையின் தாக்கத்தை சமாளிக்க மத்திய, மாநில அரசுகள் கடுமையாக போராடி வருகின்றன. நோய்த்தொற்று அதிகம் உள்ள மாநிலங்களில் ஊரடங்கு மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதேசமயம் குணமடைவோரின் எண்ணிக்கை உயர்கிறது.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,20,529 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 2,86,94,879 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் ஒரே நாளில் 3,380 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,44,082 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,67,95,549 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 1,97,894 பேர் குணமடைந்துள்ளனர்.

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 15,55,248 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நாடு முழுவதும் நேற்று வரை பொதுமக்களுக்கு 22,78,60,317 டோஸ்கள் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Comment / Reply From