• Monday, 18 August 2025
இந்தியாவில் இதுவரை 25 கோடி பேருக்கு தடுப்பூசி

இந்தியாவில் இதுவரை 25 கோடி பேருக்கு தடுப்பூசி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் புதிதாக 91,702 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இந்தியாவில் தொடர்ந்து நான்காவது நாளாக கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்துக்கும் கீழ் பதிவாகியுள்ளது. இதன் காரணமாக, இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 2,92,74,823 என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 3,403. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 3,63,079-ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 2,77,90,073 -ஆக இருக்கிறது. தற்போது மருத்துவமனைகளில் 11,21,671 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். ஒரே நாளில் 1,34,580 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியிருக்கிறார்கள். இந்தியாவில் இதுவரை 24,60,85,649 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.

Comment / Reply From