• Thursday, 21 August 2025
ஆடு, கோழி, மீன் விற்பனை சக்கைப்போடு

ஆடு, கோழி, மீன் விற்பனை சக்கைப்போடு

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மாதம் 24-ந்தேதி முதல் 2 வாரங்களுக்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.

இந்த முழு ஊரடங்கு இன்று காலை 6 மணியுடன் முடிவுக்கு வந்துள்ளது. இன்று முதல் ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கை நீடித்து முதல்-அமைச்சர்  நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியிட்டார். இதன்படி தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று காலை 6 மணியில் இருந்து அமலுக்கு வந்தது.

கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் நோய் தொற்று அதிகமாக இருப்பதால் இந்த மாவட்டங்களில் மட்டும் குறைந்த அளவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அத்தியாவசிய கடைகளுக்கு மட்டுமே அங்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இந்த மாவட்டங்களில் மளிகை கடைகள், காய்கறி, பழக்கடைகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் இன்று திறந்து இருந்தன.

இறைச்சிக்கூடங்கள், மீன் சந்தைகள் ஆகியவை மொத்த விற்பனைக்காக மட்டும் திறக்கப்பட்டு இருந்தன. அனைத்து அரசு அலுவலகங்களும் 30 சதவீத பணியாளர்களுடன் செயல்பட்டன.

சார்பதிவாளர் அலுவலகங்களில் 50 சதவீத டோக்கன் அனுமதிக்கப்பட்டு பத்திரப்பதிவு மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக பத்திரப்பதிவு அலுவலகங்களும் செயல்பட்டன. தீப்பெட்டி தொழிற்சாலைகளில் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கின.

மேற்கண்ட 11 மாவட்டங்களை தவிர்த்து சென்னை உள்பட 27 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருந்தன. இதன்படி காய்கறி, பழங்கள், இறைச்சி, மீன்விற்பனை கடைகள் இன்று காலையில் வழக்கம் போல இந்த மாவட்டங்களில் செயல்பட்டன.
 
ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டதால் இறைச்சி, மீன் உள்ளிட்ட வியாபாரம் தமிழ்நாடு முழுவதும் சக்கைப்போடு போட்டது.
 
Comment / Reply From