• Sunday, 17 August 2025
எந்நாளும் இல்லாத திருநாளாக தமிழகத்தில் அதிகரிக்கும் முதல்வர் வேட்பாளர்கள்.. யாருக்கு ஹாட்சீட்?

எந்நாளும் இல்லாத திருநாளாக தமிழகத்தில் அதிகரிக்கும் முதல்வர் வேட்பாளர்கள்.. யாருக்கு ஹாட்சீட்?

சென்னை: தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த தேர்தலில் முதல்வர் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் அரியணையில் யார் ஏற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இரு பெரும் ஜாம்பவான்களான ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத முதல் சட்டசபை தேர்தலை தமிழகம் சந்திக்க போகிறது. இதனால் மக்களிடம் யாருக்கு செல்வாக்கு என்பதை அறிய இந்த தேர்தல் உதவும் என்பதால் இது மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும், திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், இஸ்லாமிய அமைப்புகள் உள்ளிட்டவையும் இடம்பெற்றுள்ளன.


Comment / Reply From