• Monday, 18 August 2025
பச்ச புள்ளைக்கு பாலியல் தொல்லை : தட்டிக்கேட்டவர் குத்திக் கொலை

பச்ச புள்ளைக்கு பாலியல் தொல்லை : தட்டிக்கேட்டவர் குத்திக் கொலை

அரியானா மாநிலம் ரோத்தக் நகரைச் சேர்ந்தவர் காமேஷ். இவர் குத்துச்சண்டை பயிற்சி பெற்றவர் ஆவார். மாடலிங் மற்றும் நடிப்பு தொழிலில் ஈடுபட்டு வந்தார். கடந்த திங்கட்கிழமை இரவு, இவர் தேஜ் காலனிக்கு சென்றபோது 12 வயது சிறுமியை வாலிபர் ஒருவர் பாலியல் தொந்தரவு செய்வதைப் பார்த்துள்ளார். அந்த வாலிபரை காமேஷ் கண்டித்து எச்சரித்துள்ளார். 
 
இதனால் ஆத்திரமடைந்த வாலிபர், திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காமேஷை சரமாரியாக குத்தி உள்ளார். இதில் பலத்த காயமடைந்த காமேஷ் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆனால், சிகிச்சை பலனின்றி இறந்துபோனார். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comment / Reply From