• Saturday, 20 April 2024
மஹாராஷ்டிராவில் தீவிரமடைந்த கொரோனா

மஹாராஷ்டிராவில் தீவிரமடைந்த கொரோனா

மகாராஷ்டிராவில் எப்போதும் இல்லாத அளவுக்கு கொரோனாவின் தாக்கம் தீவிரமாக இருக்கிறது. எப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 57 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது குறித்து கடந்த சில நாட்களாகவே முதல்வர் உத்தவ்தாக்கரே தொடர்ந்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வந்தார். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு புதிய கட்டுப்பாடுகளை மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது.

அதன் படி 5ம் தேதியில் இருந்து வரும் 30ம் தேதி வரை இரவு 8 மணியில் இருந்து காலை 7 மணி வரை பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறது. இந்த நேரத்தில் பொதுமக்கள் தகுந்த காரணம் இல்லாமல் வெளியில் வர அனுமதிக்கப்படாது. அவ்வாறு வந்தால் அபராதம் விதிக்கப்படும். இது தவிர பகல் நேரத்தில் 5 பேருக்கு மேல் ஒரே இடத்தில் கூடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அப்படி கூடினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதோடு வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞயிற்றுக்கிழமைகளில் முழுமையான பொது முடக்கம் அமல்படுத்தப்படும்.

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி

வரும் 30ம் தேதி வரை காய்கறிக்கடை, மருந்துக்கடை, மளிகைக்கடைகள் மட்டும் இயங்க அனுமதிக்கப்படும். மற்ற அனைத்து விதமான கடைகளும் அடைக்கப்படும். திறந்திருக்கும் கடை ஊழியர்கள் விரைவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

 

சினிமா தியேட்டர்கள், மால்கள், மல்டிபிளக்ஸ், நீச்சல் குளங்கள், வாடர் பார்க், வீடியோ பார்லர், ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ், ஜிம்கள், வழிபாட்டுத்தலங்கள், சலூன்கள், பார்கள் அடைக்கப்பட்டு இருக்கும். தனியார் அலுவலங்களும் அடைக்கப்படும். பைனான்ஸ் மற்றும் வங்கி சார்ந்த தனியார் அலுவலகங்கள் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.

ரெஸ்ட்ரன்ட்கள் காலை 7 மணியில் இருந்து இரவு 8 மணி வரை பார்சல்கள் கொடுக்க மட்டுமே அனுமதிக்கப்படும். அமேசான், பிளிப்கார்ட் போன்ற இகாமர்ச்ஸ் டெலிவரி பாய்கள் காலை 7 மணியில் இருந்து மாலை 8 மணி வரை மட்டுமே பணியாற்ற அனுமதிக்கப்படும். அவர்களும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டுருக்கவேண்டும். தடுப்பூசி போடவில்லையெனில் டெலிவரி பாய்களுக்கு ஆயிரம் ரூபாயும், சம்பந்தப்பட்ட கம்பெனிக்கு 10 ஆயிரமும் அபராதம் வசூலிக்கப்படும். தொழிற்சாலைகள், கம்பெனிகள் மற்றும் கட்டுமானப்பணிகள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும். பொது போக்குவரத்துதொடர்ந்து அனுமதிக்கப்படும்.

Comment / Reply From

Stay Connected

Newsletter

Subscribe to our mailing list to get the new updates!